Friday, October 21, 2011

எனக்கும் மெனக்குமான...!

எனக்கும் மெனக்குமான பிணக்கில்

உருண்டோடின நாட்கள்.

தன்னிலை அறியா என்னிலை எண்ணி

முன்னிலை பெற்ற வினாக்களின் நிழலில்

கழிகின்றன மணித்துளிகள்.

Wednesday, January 19, 2011

கல்லையும் கரைக்குமாம்

               உண்மையில்  கல்லைக்கூட சிறுக சிறுக கரைக்கும் சக்தி காதலுக்கு உள்ளது. தனது வாழ்க்கையில் ஒரு பிடிப்பற்று , காற்றில் இசைந்த  காகிதமாய் , கால்கள்  பயணப்பட்டு , தனது நண்பன் , அம்மா , இவர்களின் உடனிருக்க மனமின்றி  அலைந்து , திரிந்து கிடந்தான் வெர்ந்தர். அவனது பயணத்தின் பதிவினை , கடிதமாக வைத்து தனது நண்பன் வில்ஹெல்ம் க்கு அனுப்பிக்கொண்டே  இருந்தான் வெர்ந்தர் .
             ஐரோப்பிய கவிஞர் கதே தனது தடையற்று  வழியும்  அறிவினை  இந்த நாவலின் நடையில் இருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம் . வெர்ந்தர் தனது பயணத்தில் சந்தித்தவர்கள் . மற்றும்  அழகான மலைகள். மரங்கள் சூழ இருந்த ஒரு வீட்டின் சுவையும் எனை அங்கு நிலவிய சூழ்நிலையை  மேலோட்டமாக சுவைக்க முடிந்தது .
             வெர்ந்தர் மனதினை சிறு சலனத்திற்கு உட்படுத்தியது . ஒரு சிறுவன் மற்றும் ஒரு கைக்குழந்தை . அக்குழந்தையை , அந்தப்பையன்  வைத்து கொண்டு அமர்ந்திருந்ததை அப்படியே  எதையும் கூட்டாமலும் . குறையாமலும்  வரைந்தான் வெர்ந்தர் . அப்போது அங்கு வந்த ஒரு பெண் அந்த பையனை பாராட்டி அமைதியாக சொன்னதை செய்தாய் . இந்தா ரொட்டி என்று கூறினாள். இரண்டு குழந்தைகளும் அதை பெற்றுக் கொண்டனர் . இதை கவனித்த வெர்நதர் , அந்தப் பெண்ணிடம் உரையாடினான் , அப்பொழுது அவள் தனது  கணவனின் நிலையைக் கூறி அவன் தங்களை விடுத்து  சுவிட்சர்லாந்து சென்றுவிட்டதாகவும் , அவன் அவர்களுக்கு எதையும் கொடுப்பதில்லை , எனவே அவள் அங்கு சென்று பார்த்துவிட்டு  அவன் அவர்களை தேவையற்றவர்களாக கருதுவதாக கூறியபின் திரும்பிவிட்டதாக கூறினாள்.
           
        மனம் நெகிழ்ந்த வெர்ந்தர்  அவர்களிடம் ஒரு க்ரசர் காசு கொடுத்து ரொட்டி வாங்க சொல்லிவிட்டு  வந்தான். இங்கு கதே குறிப்பிட்டது மிகவும் சிறப்பானது  ஒரு உதாரணம் வாழ்கையை  வெறுத்தவர்கள் போல பிதற்றுபவர்களுக்கு "தனது வாழ்வை  மிகச் சின்ன வட்டத்துக்குள் வைத்து,  அன்றைய தேவைகளை அன்றைக்கு  கையில் இருப்பதை வைத்து தீர்த்துக் கொண்டு,    " இலைகள் உதிருவதை பார்த்தால் குளிர்காலம் வந்துவிட்டது "  என்ற எண்ணம் மட்டும் கொண்டு வாழும் திருப்திகரமான ஜீவனை பார்க்கும்போது, கொந்தளித்துக் கிடக்கும் என்மனம் ஆறுதலடைகிறது  " என்று வெர்ந்தர் கூறிஇருந்தார்.  அந்தக் குழந்தைகளை பார்க்கவே வெர்ந்தர் அடிக்கடி வெளிய சென்று தனது மன அழுத்ததை குறைத்துக் கொண்டும் அவர்களையும் மகிழ்வித்தான்.
             உண்மையில்  நம்மால்,,  நமது நடத்தையால் மற்றவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள் எனில் அது ஒருவிதமான மன மகிழ்வினை கொடுக்கும்.  
            வெர்ந்தர்  கண்ணில் பட்ட ஒரு பெண்ணின் அழகினை கடிதத்தில் தனது நண்பனிடம் கூறிய அவனது வார்த்தைகளை வைத்து அவளது அழகினை யூகிக்கலாம்.     

              "நான் இங்கு பலவீனமாக கொட்டும் சொற்கள் அனைத்தும் அவளுடைய உண்மையான அழகின் சிறுசாரத்தினை கூட சொல்ல இயலாத உளறல்களே "
            
                  ஆகா அவள் ஒரு அழகி..!

             ஒரு  பிடிப்பின்றி அலையும் எவன்  ஒருவனும் ஒரு பெண்ணின் மீது கொண்ட காதலால் பக்குவமடைவான்  [ உண்மையான புரிதலோடு கூடிய காதல் எனும் பட்சத்தில் ]  அந்த அழகி லோதவின் மீது வெர்ந்தர் கண்மூடித்தனமான காதல், அவள் ஏற்கனவே வேறு ஒருவனுடன் நிட்சயம் ஆனவள் என்பதையும் தாண்டி அவனை எதோ அவளிடம் உந்தியது , அவளும் தனக்கும்  ஆல்பர்ட்டுக்கும் நிட்சயம் முடிந்த பின்னும் வெர்ந்தர் மீது ஒரு கரிசனம் காட்டினாள்.
  
             "காதலர்களுக்குத்தான் வரையரை உண்டு 
                                                          காதலுக்கு இல்லை  "

                  சாதாரணமாக மனிதனிடம் இருக்கும் நடவடிக்கையில் காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஆன்மீகநிலையே வெர்ந்தரும் லோதவின் நட்புகிடைத்தவுடன்  மிகுந்த பரவசத்தில்  மூழ்கினான்  . 

                 "காதல்" என்பது பெண்ணின் மீது மட்டும் ஏற்படுவது மட்டும் அல்ல. பரிசுத்தமான பாரபட்சமற்ற கரங்களை உடைய இயற்கையிடத்து நிகளும்,     இயற்கையை  நேசிப்பவன் தன்னையே அதனிடம் ஒப்படைக்க  நினைப்பது உண்மையே. எவன் ஒருவன் இயற்கையை முற்றும் சுவைக்க விளைகிரானோ அவனது வாழ்வும், எண்ணங்களும் இயற்கையைப் போல பசுமையாகவும் செழிப்பாகவும்  இருக்கும்.

             " தனது வீட்டில் மனைவீன் மார்பகங்களிலும் தனது குழைந்தைகளுக்கு பசியாற்ற போதுமான வேலை "

          இவைகளே ஒருவனது மனதினை அதிகபட்ச சந்தோசத்தில் ஆழ்த்தமுடியும்.

             ஆர்பட்டமற்ற அழகினை உடையவளான லோதா தனது ஆதரவான, மற்றும் அன்பான பேச்சினால் துவண்டுகிடந்த சிலமனதுகளை புத்துணர்ச்சிஊட்டும் செயலை, தொடர்ந்துகொண்டிருந்தார் .  புவியில் இருந்து தூக்கி வானம் நோக்கி எதை எரிந்தாலும் ஈர்ப்பு விசை  காரணமாக அது மீண்டும் வேகமாக புவியை வந்து சேரும். அதுபோல வெர்ந்தரும் , லோதேவால்  ஈர்க்கப்பட்டன , பாவம் அவனது நிலைமை உலகத்திலேயே தனக்குப்பிடித்தமான ஒரு பெண் ஆனால் வேறு ஒருவனுடன்  வாழப்போகிறாள் என்ற  நினைவுகள் அவனை வாழும் போதே நரக  உணர்வினை ருசிக்கச் செய்தன ஆனால் ஒரு சில நிமிடங்கள் அவளின் பேச்சும் , சில நொடிகள் அவளது ஆழமான பார்வையும் அவனை மீண்டும் , மீண்டும் வாழ்க்கையை வாழ வேண்டியது .
         என்நேரமும்  நமது செயல்பாடு , நடவடிக்கையின் திரம் போன்ற அனைத்தையும் கண்காணித்து இதை இவ்வாறு செய்கிறாய் , இது நல்லது , இது சரியல்ல , என்று அன்புடன் கட்டளையிடும் குணம் கொண்ட துணை வாய்க்கப்பட்டால் உண்மையிலேயே " துள்ளாத மனமும் துள்ளும் ", லோதேயின் அன்புக்கட்டளையை முழுமனதுடன் ஏற்று சிறு பிள்ளைப் போல அவளது வார்த்தைகளுக்காக ஏங்கி நின்றான் வெர்ந்தர் , அவனது கண்களுக்கு மட்டுமல்ல நடைமுறையிலேயே லோதேயினது நடவடிக்கைகள் , செயல்படும்விதம் அனைத்தும் தூய தாயுள்ளம் கொண்டதாகவே இருந்தது .
        இந்த தொடர்ச்சியான நாவலின் நடையில் , காதல் மட்டுமின்றி , அன்பான குழந்தைகள் , வாழ்க்கை  ,  புரிதல் , கோபம் , என்று பல்வேறு பரிமாணங்களை தெளிவாக விளக்கியிருக்கிறார் கதே .
        "அனைவரும் தத்தமது வாழ்க்கையில்  நிகழ்காலத்தினை விடுத்தது , இறந்தகாலத்து கசப்பான அனுபவங்களை நினைத்தே, நிகழ்காலத்தையும் , வரும்காலத்தையும் கசப்பான ஒன்றாக மாற்றிக் கொண்டுள்ளனர்",
       "உலகில் அனைவரும் குழந்தைகளே , இதை உணர்ந்தவன் கடவுள்!"
     கடவுளின் பார்வையில் , சிறு குழந்தை , வளர்ந்த குழந்தை , முதிர்ந்த குழந்தை என்றவாறே பகுத்துவைத்தார் , தொடர்ந்து லோதேயின் அழகு மற்றும்  நற்குணங்களையே பதித்துள்ளார்  கதே .
      ஆல்பர்டின் வருங்கால மனைவி லோதே அதனை ஏற்கமறுக்கும் வெர்ந்தரின் மனது , புயல்காற்றில் நாணல் படும் வேதனையில் நனைந்தது எதற்காகவும் , அவளை மாற்றான் விட்டுப்பெண்ணாக நினைக்கலாகாது வெம்பித்துடித்தான்.

       ஆல்பர்டினை புகழும்  வெர்ந்தரின் மனம் உயர்ந்ததே அனால் அவன் புகழும் காரணம் வெர்ந்தரின் காதலின் உக்கிரத்தினையும் ஆழத்தினையும் வெளிப்படுத்துகிறது.

      "ஆல்பர்ட்டு உன்னதமானவந்தான் இதுவரை அவன் என் முன்னே அவளை முத்தமிட்டதில்லை, ஆகையால் ஆண்டவன் அவனுக்கு நல்லது செய்ய வேண்டும் ."

        என்னதான் தியாகியா இருந்தாலும் எல்லா விஷயத்திலும் அவனால் ஆல்பேர்டிடம் ஒத்துப்போக முடியவில்லை, வாய்ப்பேச்சில் உண்டான ஒரு சண்டை அவர்களிடையே ஒரு விரிசலை நிலையகா துவிட்டு பின் ஏற்படுத்தியது. அவர்களுடைய திருமனத்திர்க்குபின்னர் ஆல்பர்ட் வேர்ந்தரிடம், லோதே பழகுவதை எதிர்த்தான். உலகில் மிகவும் பிடித்த ஒருவர் அவராக வந்து இனி நீ என்னை பார்க்ககூடாது  என்றால், உச்சந்தலையில் உளி வைத்து  அடிப்பதைப் போன்றுதானே இருக்கும்.

        எல்லாம் ஆனபிறகு கடைசியாக ஒருமுறை தன் வாழ்வில் ஒரு அழகிய தென்றலாக  வந்து சிறிது காலம் என்னை சந்தோஷப்படுத்தியவலை பார்த்துவிட்டு பிறகு நான் யாரையும் பார்க்க விரும்பாமல் எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லலாம் என்ற எண்ணத்துடன் சென்று அழகிய லோதவினை பார்த்துவிட்டு பின் அவளது உல்மனாதில் இவன் மீது இருந்த காதல் வெளிப்பட்டமையால் அவனது அன்பையும் உதடுகளின் இணைப்பையும் கனநேரம்  ஏற்றுக்கொண்டவள், உடனே அவனை தள்ளி  அழ ஆரம்பித்தாள்..

         துள்ளலான மனநிம்மதியுடன் வெர்ந்தர் அவனது அம்மாவுக்கும் தனது நீண்டகால நண்பனுக்கும் பிரியா விடையை கடிதம் மூலம் பதித்துவிட்டு,
ஆல்பர்டின் கைத்துப்பாக்கியால் தானும்.......
          வெர்ந்தரின் மூச்சு காற்றில் கலப்பது நின்றது, அதனை அறிந்த லோதவும் நோயுற்று படுத்தபடுக்கையானாள்..

           உண்மையில் இந்த சிறு நாவலை வாசித்தபோது இனம் புரியாத ஒரு அழுத்தம்தான் தோன்றியது என்னுள்..                                                                                             காதலின் வலி மிகவும் கொடியதுதான்.. (கதே வின் - காதல் துயரம் நாவலின் நீட்சி  )

Wednesday, January 5, 2011

இனிமைக்கு இரண்டொரு சொற்கள்

இன்றய  உண்மைகள் அனைத்தும்
 நாளைய கானலே,
 நாளைய  உண்மைகள் அனைத்தும்
 இன்றைய கானலே.

ஓர் இரவு

தளர்ந்த நடை
கலைந்த உடை
குழைந்த தலை முடி
முன் வரும் வாகனங்களின்
புகைக்கு போட்டியாக
சிகெரட் புகை, ,
ஏன் இந்த தளர்வு ?
ஏன் இந்த மௌனம்?
இனம் புரியாத கவலைகள்
குடிகொண்ட முகம் ,
பார்த்த கனம் தோன்றியது
எதாவது செய்ய வேண்டுமென்று ,
யார் என்று தெரியாது
என்ன கஷ்டம் என தெரியாது ,
அவனது தேவை அறியவில்லை ,
அங்கு எனது சேவை
அவன் பிடித்த சிகெரட்டை
நான் அடக்கம் செய்தேன்
என் இடக்காலால்..