Monday, October 25, 2010

இனிமைக்கு இரண்டொரு சொற்கள்

ரோமின் அழகினை,,
தீயோடு சேர்த்து  ரசித்த நீரோ,
தன்னிலை மறந்ததற்கு காரணம்
அழகு,!
நீரோவின் அதிகாரத்தில்  அழகிற்கு
பொருள் - பெண்கள்,,

Wednesday, October 20, 2010

கைக்கிளை

  உன் மெல்லிடையில் சிக்குண்ட என் மனம்
திக்கற்று தவிக்குதடி,
நிச்சலனமற்ற நென்னனுக்கள் நுன்இடை
கண்டு வெம்பித் துடிக்குதடி,
உன் அரும்புப் பேச்சும் நுன் 
குறும்புப்  பார்வையும் என்னை 
நரம்புடைக்கச்  செய்யுதடி,
உன்னால் உண்டான நென்நோயிற்கு
நீயே மருந்து..        

அழகு

அழகு,,
எங்கும்  அழகு,,
எதிலும்  அழகு,,
எல்லாம் சிறிது காலம்தான்,,
நுனி புல் மீது
பனித்துளி போல. 

Monday, October 18, 2010

நான்,, நானாக,,

சென்றவரத்தின் மரணத்திற்காக
கண்ணீர் சிந்திகொண்டிருகும் பலர்,
இந்த வரத்தினை நினைத்து
சிரித்துக்கொண்டிருகும் சிலர்,
இவ்வாரானா இரண்டு நிகழ்வுகளும்
என்னை சலனபடுதவில்லை,
ஏனென்றால் எந்தப் பணியும்
 என்னால் கொள்ளப்படவும் இல்லை ,
எந்தப் பணியும் என்னால்
பிறக்கப்போவதும் இல்லை. 

Wednesday, October 13, 2010

Mind Voice கவிதை








மூடப்பழக்கத்ததின் முடிச்சுகளில்

முடங்கிகிடக்கும் முட்டாள்களே,

" ஐயா சாமி பிச்சை போடுங்க " 

                                                      அதிகாரத்துவதத்தின் ஆணவத்தின் கீழ்
                                                       அடங்கிகிடக்கும் அடிமைகளே,

"அம்மா தாயே தர்மம் பண்ணுங்க"

                                                      ஆதிக்கத்திற்காகவும் அழகிற்க்காகவும்
                                                       ஆர்பரிக்கும் அவசர அறிவாளிகளே,

"தர்மப்பிரபு,,,, அம்மா தாயே
காலையில் இருநது சாப்டல சாமி
5 ரூபா குடுங்க சாமி"

(oh ஷிட் these  people  wasting
my  time ,,)

                                                  " அடிப்பாவி மகளே இந்த நிமிஷம்
                                                   கூட நிரந்தரம் இல்ல dee ..."


 

Monday, October 11, 2010

சாலையில் பித்தன்

பாலாவின் படத்தில்
நடிகப்போரர் போல,
சாலை ஓரத்தில் 
கிழிந்த உடையுடன் 
முன்னால் கோடீஸ்வரர். 

Monday, October 4, 2010

உண்மையில் யார் குருடு


      


        அந்தி சாயும் மாலை நேரம்
      தொந்தி சாய்ந்த மனிதர்களின்
      கூட்டம் தாண்டி ஒலித்த,
      மென்மையான கீதங்களால்
      சந்தோஷத்தில்  நிறைந்தது
      என்மனம், மட்டுமின்றி
       பாடல்களை இசைத்த
       பார்வையற்றவர்கிளின் தட்டும்
       நிறைந்தது - செல்லாதா  25 பைசாக்களால்
       மற்றும் கிழிந்த 5 ரூபாய் தாள்களால்,,

       உண்மையில் யார் குருடு.. ?